பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்கு தண்டனை - ஆந்திராவில் புதிய மசோதா நிறைவேற்றம்

ஆந்திரா: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதா இன்று ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.

ஆந்திரா: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்ட மசோதா இன்று ஆந்திரா சட்டசபையில் நிறைவேறியது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டருக்கு பலரும் வரவேற்பும், ஆதரவும் தெரிவித்தனர்.

அதேவேளையில் எதிர்ப்பும் கிளம்பியது. என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆந்திர முதலமை‌ச்ச‌ர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும், போலீசாரையும் பாராட்டினார்.

இதற்கிடையே, ஆந்திர சட்டசபையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேசும்போது, பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, சமீபத்தில் நடந்த ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாளில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 21 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும். இதில் முதல் 7 நாட்களில் விசாரணைகள் அனைத்தும் முடிக்கப்படும்.

ஆந்திர பிரதேச திஷா சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மசோதா இன்று ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஆந்திரா மாநிலம் தான் பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் முதல் மாநிலமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...