மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை

நீலகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. வாகன ஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. வாகன ஓட்டுனர்கள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் சிலநாட்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் முகாமிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த நிலையில், குஞ்சப்பனை நெடுஞ்சாலையில், சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலையில் நடந்து சென்றது.



அப்போது, எதிர்பாராதவிதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், யானையை கண்டதும் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். யானை இவர்களை தாக்கும் என்ற சூழ்நிலையில், பின்னே வந்த லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனம் அருகே நிறுத்தி இளைஞர்களை காப்பாற்றினார்.

பின்னர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை, யாருக்கும் எவ்வித இடையூறுமின்றி சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...