திருப்பூர் - கோவை ரயிலில் கத்தியை காட்டி பணம்‌ பறித்த வாலிபர் கைது

கோவை: திருப்பூரில்‌ இருந்து போத்தனூருக்கு மங்களுர்‌ விரைவு ரயிலில் பயணம்‌ செய்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: திருப்பூரில்‌ இருந்து போத்தனூருக்கு மங்களுர்‌ விரைவு ரயிலில் பயணம்‌ செய்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த நவம்பர் 25ம் தேதி திருப்பூரில்‌ இருந்து போத்தனூருக்கு மங்களுர்‌ விரைவு வண்டியில்‌ கோவையை சேர்ந்த குமரகுருபரன்‌ என்பவர் பயணம்‌ செய்துள்ளார். அப்போது, திருச்சி லால்குடியை சேர்ந்த திவாகர்‌ என்பவர் குமரகுருபரனிடம் கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி பணம்‌ பறித்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போத்தனூர்‌ இருப்பாதை காவல்‌ நிலைய ஆய்வாளர்‌ தனலட்சுமி தலைமையிலான போலீசார் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட திவாகரை கைது செய்தனர்.

பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவன் மீது ஏற்கனவே திருப்பூர்‌ இருப்புப்பாதை காவல்‌ நிலையத்தில்‌ ஒரு வழக்கும்‌, நாகப்பட்டினம்‌ இருப்புப்பாதை காவல்‌ நிலையத்தில்‌ ஒரு வழக்கும்‌, எழும்பூர்‌ இருப்புப்பாதை காவல்‌ நிலையத்தில்‌ ஒரு வழக்கும்‌, திருச்சி இருப்புப்பாதை காவல்‌ நிலையத்தில்‌ ஒரு வழக்கும்‌, காந்தி மார்க்கெட்‌, திருச்சி மாநகர காவல்‌ நிலையத்தில்‌ ஒரு வழக்கும்‌, திருச்சி கோட்டை, திருச்சி மாநகர காவல்‌ நிலையத்தில்‌ ஐந்து வழக்குகளிலும்‌ மொத்தம்‌ 10 வழக்குகளில்‌ சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் காவல்‌ துறை இயக்குநர்‌ முனைவர்‌. சைலேந்திரபாபு IPS, காவல்‌துறை தலைவர்‌ வனிதா IPS, மற்றும்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌ மகேஷ்வரன்‌ அவர்கள்‌ ஆனையின்‌ பேரில்‌ கோவை கோட்டம்‌ துணை காவல்‌ கண்காணிப்பாளர்‌ அண்ணாதுரை, போத்தனூர்‌ இருப்பாதை காவல்‌ ஆய்வாளர்‌ தனலட்சுமி ஆகியோர்‌ நடவடிக்கை எடுத்து, கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ அவர்களுக்கு சிபாரிசு செய்ததின்‌ பேரில்‌ குற்றவாளி திவாகரை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கோவை மத்திய சிறையில்‌ அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...