தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.


கோவை: உள்ளாட்சித் தேர்தலில் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களுக்கும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றன. இதில் தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்குத் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. 1800-599-6000 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது 0422-2301586 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் துணை வட்டார வளர்ச்சி நிலையில் அலுவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் தெரிவிக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனடியாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும். நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள் மக்கள் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...