திருப்பூர்: திருப்பூர் அருகே தீபதிருவிழாவிற்காக வாசலில் இருந்த குத்துவிளக்கை திருடிச் சென்று தப்பிக்க குட்டையில் குதித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே தீபதிருவிழாவிற்காக வாசலில் இருந்த குத்துவிளக்கை திருடிச் சென்று தப்பிக்க குட்டையில் குதித்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் போயம்பாளையம் அடுத்த குருவாயூரப்பன் நகர் பகுதியில் குடியிருந்து வரும் பனியன் தொழிலாளி சிவக்குமார் என்பவர் கார்த்திகை தீபதிருவிழாவை முன்னிட்டு வீட்டின் முன்பு கோலத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துள்ளார். இதனை கண்ட இளைஞர் ஒருவர் குத்துவிளக்கைத் திருடிச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அருகில் இருந்தவர்கள் பார்த்து துரத்திய போது, இளைஞர் அருகில் இருந்த நல்லாறு குட்டையில் குதித்துள்ளார். அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.