நீலகிரியில் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச மாத விலை நிர்ணயம்; விவசாயிகள் அதிருப்தி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான நவம்பர் மாதத்திற்கான விலையை குறைத்து நிர்ணயித்ததால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான நவம்பர் மாதத்திற்கான விலையை குறைத்து நிர்ணயித்ததால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இதில் கூட்டுறவு தொழிற்சாலைகளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒருமுறை இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மூலம் மாதவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் மட்டும் வாராந்திர விலை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட கூட்டுறவு இலைகள் மூலம் விவசாயிகளுக்கு பசுந்தேயிலைக்கான தொகை வழங்கப்படும்.



இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு மாத விலையினை இண்ட்கோ சர்வ் அதிகாரிகள் நிர்ணயித்தனர். இதில் மஞ்சூர், கைகாட்டி, சாலீஸ்பரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூபாய் 11 ஆகவும், பந்தலூர் தொழிற்சாலையில் 10 ரூபாய் 50 பைசாவாகவும் மற்றும் பிக்கட்டி, மேற்குநாடு, இத்தலார், நஞ்சநாடு, கிண்ணக்கொரை, மகாலிங்கா, கரும்பாலம், எப்பநாடு, பிதர்காடு, பிராண்டியர் ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 10 ஆகவும் மாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



கடந்த சில மாதங்களாகவே கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கான மாத விலை படிப்படியாக குறைந்து வருகிறது. பெரும்பாலான தொழிற்சாலைகளிலும் கிலோவிற்கு வெறும் 10 ரூபாயாக மாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதனால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பசுந்தேயிலைக்கு விலை குறைவால் தொழிலாளர்கள், தோட்டப் பராமரிப்பு, அன்றாட குடும்ப செலவினங்களை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...