கோவை: வால்பாறையில் வெயில் மற்றும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில் தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, வால்பாறையில் கடும் வறட்சி நிலவி வருவதால் பரம்பிகுளம், ஆழியாறு திட்டத்தின் மூலாதாரமாக விளங்கும் சின்னகல்லார் மற்றும் நீரார் அணைகளுக்கு வரும் ஊற்று நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதேபோல, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, நல்லகாத்து ஆறு உட்பட பல ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து மிகவும் குறைந்து ஆறுகள் குட்டைகளாக மாறி விட்டது.

மேலும், வெயில் மற்றும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக தேயிலை செடிகளைக் காக்கும் பொருட்டு, தேயிலை தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் பணியினை முடுக்கி விட்டுள்ளது. யூரியா மற்றும் எம்.ஓ.பி கலந்த கரைசலை நவீன இயந்திரம் மூலம் செடிகளின் மேல்பகுதியில் தெளித்து வருகிறது.