கோவை: கோவையில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து எறிய முயன்ற திமுகவினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கோவையில் சிவானந்தா காலணி பவர் ஹவுஸ் முன்பு குடியுரிமை சட்ட திருத்த சோதாவினை கிழித்து எறியும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

மாநகர் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்கள் இளங்கோ மற்றும் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து எறிய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.