திருப்பூர்: மத்திய அரசு நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சட்ட நகலை கிழித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு, மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட நகலை கிழித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.