பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம்; நீண்ட வரிசையில் காத்திருந்து புகார் மனு அளித்த பொதுமக்கள்

கோவை: பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் விண்ணப்பங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர்.

கோவை: பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் விண்ணப்பங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் புகார் மனுவை அளித்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி கொடுப்பதாக விளம்பரம் செய்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் முதலீடு செய்தனர்.

ஆரம்பத்தில் சில மாதங்கள் முறையாக வட்டி தொகையை வழங்கி வந்த அந்த நிறுவனம், பின்னர் அதனை கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளது. மேலும் இதன் கிளைகள் பல்வேறு இடங்களில் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து முதலீடு செய்தவர்கள் விசாரித்தபோது, அந்த நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் அவரது பங்குதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பதினோரு கோடி ரூபாயை 6 மாதத்திற்குள் முதலீட்டாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 



நிதி நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை பெற்றுத் தருவதற்காக அதன் பொறுப்பை சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் கொடுத்து அதன் அலுவலகத்தில் தனி அறை திறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று விண்ணப்பித்திருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து புகார் மனு விண்ணப்பத்தை அளித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...