திருப்பூர்: ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் இன்று ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இக்கட்சி குறித்த முழு அறிவிப்பும் வெளியாகும் எனவும் அமைச்சர்களின் விமர்சனங்களை ரஜினிகாந்த் அவர்கள் எப்போதும் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், ரஜினி கமல் கூட்டணி அமைப்பார்களா..? என்ற கேள்விக்கு ரசிகர்களின் மனநிலையை பொறுத்து அது அமையும் எனவும் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார் எனவும் பேட்டியளித்தார்.