பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? ஸ்டாலின் கடும் சாடல்
சென்னை: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா 125 உறுப்பினர்களுடன் ஆதரவுடன் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது.
இது குறித்து, திமுக தலைவர்
மு க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி", என சாடியுள்ளார்.

மேலும், இதுவரை 'ஊழல் ஆட்சி' - 'கொலைகார ஆட்சி' - 'கொள்ளைக்கார ஆட்சி' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது 'தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக' மாறியிருக்கிறது, என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியின் உண்மை முகத்தை திமுக-வினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும் என அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,
கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, 8.40 மணி அளவில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
மசோதா வெற்றி பெறுவதற்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 125 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
மசோதாவுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர். அதனையடுத்து, குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் 11 ஆம் தேதி முதல் சட்டமானது.