கோவையில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலி; போலீசார் விசாரணை

கோவை: சிங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சிங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(74). இவர் திருச்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கமாக சாந்தி கியர்சில் மதிய உணவு உண்ட பிறகு மீண்டும் பணிக்கு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், இவர் இன்று வழக்கம் போல உணவருந்திவிட்டு, விஜிஎம் மருத்துவமனை அருகே பேருந்தை விட்டு இறங்கி மீண்டும் தான் பணிபுரியும் பெட்ரோல் பங்கிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கள்ளிமடை பகுதியிலிருந்து வெளியே வந்த சிமெண்ட் கலவை லாரி திருச்சி சாலை நோக்கி செல்லும்போது, எதிர்பாராத விதமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, முதியவரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...