கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை கண்டித்து கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியாவை இந்துத்துவா நாடாக்கும் வகையில் இச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இச்சட்டம் அமைந்திருப்பதாகவும் மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர். ஈழ தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கவில்லை எனவும் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.