கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினரை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய, தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.

இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு கண்டனம் தெரிவித்து, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சமூக நீதி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் தாக்கி பொய் வழக்கில் கைது செய்திருப்பதாகவும், தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.