சிங்காநல்லூரில் பழுதடைந்த ஹவுசிங் யூனிட்; புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி டிச., 13ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் - நா.கார்த்திக் எம்எல்ஏ

கோவை: சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி வரும் 13ம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி வரும் 13ம் தேதி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே 17.55 ஏக்கரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது பாழடைந்து சிதிலம் அடைந்து உள்ளதாக கூறினார்.

வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் அரசின் மோசமான, முறைகேடான கட்டுமானமே காரணம் எனவும் இங்கு குடியிருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த 2016, 20118 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி நிலை கூட்டத்தொடரில் இந்த வீடுகளின் நிலை குறித்து சட்டமன்றத்தில் பேசியதாகவும் புதிய வீடுகள் கட்டித்தர சட்டத்தில் இடமில்லை என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்ததாகவும் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பல முறை வலியுறுத்தியும், அங்கு வசிக்கும் மக்களுக்காக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முன்வரவில்லை என்றார்.

மேலும், அங்கு உள்ளவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால், தமிழக அரசு செவி சாய்க்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து வரும் 13ம் தேதி சிங்காநல்லூர் உழவர் சந்தை,ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...