கோவை: கோவையில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகலினை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டம் நடத்திய 63 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.