கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு செல்லும் சாலையில், சீரமைப்பு பணிகளுக்காக மண் கொட்டி வைத்திருப்பதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவமனைக்குள் தூக்கிச் செல்லும் அவலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை ஆர்எஸ் புரம் சம்பந்தம் கிழக்கு சாலை பகுதியில் அமைந்துள்ளது ஆர்.எஸ் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த பகுதியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது வருவதால் ஆம்புலன்ஸ்களை மருத்துவமனை வரை கொண்டு வருவது சிக்கலாக உள்ளது.

மேலும், இந்த மருத்துவமனை வரும் வழியில் புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லி மண்ணை சாலையின் குறுக்கே கொட்டி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அவசர சிகிச்சைக்காக அழைத்து வரும் நோயாளிகளை, நோயாளிகளின் உறவினர்கள் தூக்கிச்சென்றபடி மருத்துவமனை வரை கொண்டு செல்லும் அவலமும் அரங்கேறி வருகிறது.

அதேபோல, ஒரு சில நோயாளிகள் தூக்கக் கூடிய நிலையில் இல்லாததால் அவர்களை ஸ்ரெட்சர் மூலமாகவும் சாலையில் அழைத்துச் செல்கின்றனர். மேலும், இந்த சாலையை ஆம்புலன்ஸ் வரும் அளவிற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் இல்லையெனில் விரைவாக பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகளின் உறவினர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வளர்ச்சிப் பணி என்பது நல்ல பணியாக இருந்தாலும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.