நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி தடையை மீறி அரசியலமைப்பு திருத்த சட்டத்தை எரிக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற இந்த கண்டன முழக்க ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் தமிழர்களைப் புறக்கணிக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் என்றும், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்காதது நியாயமா? என்று கூறியும் சர்வதேச அகதிகள் சட்டத்தை புறக்கணிப்போம் என்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி குடியுரிமை திருத்த சட்டத்தை எரிக்க முயற்சி மேற்கொண்டனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காமல் அனைவரையும் கைது செய்தனர்.