மேட்டுப்பாளையத்தில் செல்பி மோகத்தால் ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செல்பி எடுக்க முயற்சித்த இளைஞர் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவலூரைச் சேர்ந்தவர் இளங்கோ(33). இவர் இன்று காலை தனது நண்பர்கள் இருவருடன் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திய பின்பு, இருசக்கர வாகனத்தின் மூலம் நெல்லித்துரை பாலத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இளங்கோ மட்டும் பாலத்தின் தடுப்பு சுவர் மீது நின்று பவானி ஆற்றினை செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது, கால் தடுமாறி பவானி ஆற்றில் தலைகுப்புற விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சக நண்பர்கள் மற்றும் அருகில் இருப்பவர்கள் பார்த்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி பரிசல் உதவியுடன் தவறி விழுந்த இளங்கோவை தேடினர். இரண்டு மணி நேரமாக தேடியும் உடல் இதுவரை கிடைக்காத நிலையில், தொடர்ந்து உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. செல்பி மோகத்தால் பவானி ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...