திருப்பூர் சந்தைகளில் வெங்காயம் கிலோ ரூ.35-க்கு விற்பனை..! உணவு வழங்கல் அதிகாரிகள் சோதனை

திருப்பூர்: வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூர் சந்தைகளில் வெங்காயம் பதுக்கலை தவிர்க்க, உணவு வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் திருப்பூர் சந்தைகளில் வெங்காயம் பதுக்கலை தவிர்க்க, உணவு வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மாவட்டம் தோறும் சந்தைகளில் வெங்காயம் பதுக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் தென்னம்பாளையும் சந்தையில் வெங்காயம் மண்டிகளில் இன்று உணவு வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, வெங்காயம் மண்டி உரிமையாளர்கள் எத்தனை டன் வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் தற்போது கிலோ 100 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அதேபோல், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ 35 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வெங்காய மண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர். தற்போது எகிப்தில் இருந்து சுமார் 10 டன் அளவுவரை வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...