திருப்பூர்: திருப்பூர் அருகே செய்வினை நீக்கப்படும் என கூறி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட இரண்டு பி.இ. பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் கோவில்வழி ஓடியண்ட் பனியன் நிறுவனம் எதிரில் வசித்து வருபவர் மகேஸ்வரன்(35). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், இவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு இரு வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தங்களை ஒரு மதத்தின் (முஸ்லீம்) பெயர், ஆடை அதே போல் அணிந்து, அறிமுகம் செய்து கொண்டு தங்களுக்கு மாந்திரிகம் ஜோதிடம் தெரியும் என கூறியுள்ளனர்.
அப்போது, மகேஸ்வரனிடம் உங்கள் குழந்தைக்கு யாரோ செய்வினை செய்துள்ளனர். அதனை எடுக்க வேண்டும் என்றால் 4500 செலவாகும் எனவும் வழிபாடு மூலம் செய்வினையை நீக்கி விடலாம் என பெயரை மாற்றி, மாற்றி கூறியுள்ளனர். சந்தேகமடைந்த மகேஸ்வரன் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இரு வாலிபர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தஞ்சை மாவட்டம் கும்பகோணம், நந்திவணம், மருதநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் பாலாஜி (24) என்பதும், திருவாரூர் தாலுக்கா மருதப் பட்டினம், மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் மகாபிரபு (23) என தெரியவந்தது.
விசாரணையில் இவர்கள் திருப்பூர், அவினாசி ரோடு, திருமுருகன் பூண்டி பகுதியில் தங்கி, இதுபோன்று பல்வேறு பகுதிக்கு சென்று வீட்டில் உள்ளவர்களிடம் ஜோதிடம் தெரியும், செய்வினை எடுக்கப்படும் என கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலை செய்து வந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் ஊரக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் பி.இ. படித்த பட்டதாரி வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.