7 பேருக்கு மறுவாழ்வு அளித்த மூளைச்சாவடைந்த 50 வயது பெண்‌..!

கோவை: கோவை அடுத்த மணியக்காரன் பாளையத்தில் உயர் இரத்த அழுத்தம்‌ காரணமாக மூளைச்சாவடைந்த 50 வயது பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கோவை: கோவை அடுத்த மணியக்காரன் பாளையத்தில் உயர் இரத்த அழுத்தம்‌ காரணமாக மூளைச்சாவடைந்த 50 வயது பெண்ணின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

கோவை மாவட்டம்‌, மணியக்காரன் பாளையம்‌, பாலமுருகன்‌ நகர்‌ 2வது வீதியில்‌ வசிக்கும்‌ சதீஷ்குமார்‌ மற்றும்‌ தனசேகர்‌ ஆகியோரின்‌ தயார்‌ சாந்தமணி(50). இவர்‌ கடந்த 06.12.19 தேதி அன்று இரத்த அழுத்தம்‌ அதிகமாகி மூளையில்‌ இரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவிழந்தார்‌. உடனடியாக அவர்‌ அருகில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்‌. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர்‌ மேல்சிகிச்சைக்காக கோவை கே.எம்‌.சி.ஹெச்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பிரிவில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில்‌, கடந்த 08.12.19-ஆம்‌ தேதி அவருக்கு மூளைச்‌ சாவு ஏற்பட்டது. அதனைத்‌ தொடர்ந்து அவரது மகன்கள்‌ சதீஷ்குமார்‌ மற்றும்‌ தனசேகர்‌ ஆகியோர்‌ தயார்‌ சாந்தமணி உடல்‌ உறுப்புகளை தானம்‌ செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின்‌ அனுமதியுடன்‌ அவரது இதயம்‌, நுரையீரல்‌, சிறுநீரகங்கள்‌, கல்லீரல்‌ மற்றும்‌ கண்கள்‌, ஆகியவை தானமாக பெறப்பட்டது. நுரையீரல்‌, கல்லீரல்‌, ஒரு சிறுநீரகம்‌ கே.எம்‌.சி.ஹெச்‌. மருத்துவமனைக்கும்‌, மற்றொரு சிறுநீரகம்‌, கண்கள்‌ கோவையில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனைக்கும்‌, இதயம்‌ சென்னையில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனைக்கும்‌ வழங்கப்பட்டது. கே.எம்‌.சி.ஹெச்‌ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்‌ உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்குத் தகுந்த நேரத்தில்‌ மிகவும்‌ திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்‌.

இது குறித்து கே.எம்‌.சி.ஹெச்‌. மருத்துவமனை தலைவர்‌ நல்லா ஜி பழனிசாமி கூறுகையில்‌, மக்களிடையே உடல்‌ உறுப்பு தானம்‌ குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர்‌ இறந்த பிறகு அவரது உடல்‌ உறுப்புகள்‌ தானமாக வழங்கப்பட்டால்‌ அது பலரது உயிரைக்‌ காப்பாற்ற உதவும்‌ என்றவர், உடல்‌ உறுப்பு தானம்‌ வழங்கிய சாந்தமணி குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக்‌ கொள்வதாக கூறினார்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...