கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை காந்தல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவருடன் மகாலட்சுமி, தாமோதரன் என மூவரும் யுனோவா காரில் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இன்று அதிகாலை வீடு திரும்பி கொண்டு இருந்தனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியே உதகைக்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது, குமரன் குன்று அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சஞ்சீவ் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும், பின் பக்கத்தில் அமர்ந்து வந்த மகாலட்சுமி மற்றும் தாமோதரன் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிறுமுகை காவல்துறையினர், காயமடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.