கோவை: கோவை ராஜவீதி தேர்முட்டி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ராஜவீதி தேர்முட்டி அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை முத்துசாமி வீதியை சேர்ந்த தம்பதிகள் செல்வராஜ் மற்றும் மகேஸ்வரி. இவர்கள் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டவுன்ஹாலில் உள்ள ராஜ வீதிக்கு சென்றுள்ளனர். பொருட்களை வாங்கிய பின் வீட்டிற்குச் செல்ல இருசக்கர வாகனத்தை எடுத்தபோது வண்டி பஞ்சராகியிருந்தது. இதையடுத்து செல்வராஜ் மொபைல் பஞ்சர் போடும் நபரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இந்த நிலையில், பஞ்சர் போடுபவருக்காகக் காத்திருந்த போது அங்கே மது போதையில் வந்த நபர் ஒருவர் திடீரென இருசக்கர வாகனத்தை திருடிச் செல்ல முயன்றுள்ளார்.

இதையடுத்து, செல்வராஜ் சத்தம் போட்டதால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெரிய கடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.