நீலகிரி: மண்சரிவு காரணமாக நிறுத்தி வைக்கபட்டிருந்த மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை ஒரு வாரத்திற்கு பின் இன்று மீண்டும் துவங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஏழு முறைக்கு மேல் மலை ரயில் ரத்து செய்யபட்டது பின்னர் மீண்டும் இயக்கபட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால், கடந்த ஒருவாரகாலமாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பின்னர் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்த நிலையில் சேதமடைந்த பகுதிகளில் புதிய தண்டவாளம் பொருத்தப்பட்டு பணிகள் நிறைவுற்றது.
இதனையடுத்து இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து ஒருவாரத்திற்கு பின் மீண்டும் துவங்கியுள்ளது.
காலை 7.15 மணிக்கு 200 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறபட்டு சென்றது. கடந்த ஒருவாரகாலத்திற்கு பிறகு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து துவங்கியதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.