கோவை: தெலுங்கானாவில் கொடுக்கப்பட்டது போன்ற தண்டனையை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க முடியாதா என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ. கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை: தெலுங்கானாவில் கொடுக்கப்பட்டது போன்ற தண்டனையை பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு கொடுக்க முடியாதா என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் வ. கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், காட்டுமிராண்டிகளை அழிப்பதில் இதைவிட மோசமான வழிமுறையைப் பின்பற்றுவதில் கூட தமிழ் பேரரசுக்கட்சி துணை நிற்கும். ஆனால் அவசரம் அவசரமாக செய்து முடிக்கும் எதுவும் நீதிக்கும், நேர்மைக்கும் மரியாதை செய்ததாகாது என்றார்.
அதே போல, தெலுங்கானாவில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களோ, வசதி படைத்தவர்களோ அல்ல. ஆனால் அதிகாரத்தில், ஆட்சியில், பண வசதிகள் கொண்ட பிள்ளைகள் அரங்கேற்றிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ காட்டுமிராண்டிகளுக்கு ஏன் இன்னும் பாதுகாப்பு என்றவர், அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கதறிய 200க்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்த ரத்த காட்டேறிகளுக்கு என்ன தண்டனை என கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழக அரசு இவர்களுக்கு தெலுங்கானாவில் நடந்தது போன்ற தண்டனையை கொடுக்க முடியாதா என்றும் யார் தவறு செய்தாலும் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவர்களை அழிக்கும் நிலையை அரசு எடுத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் மனித குலமும் ஆதரிக்கும் எனவும் இதற்கு தமிழக அரசு விரைவில் ஒரு பதில் சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.