தமிழ் புலிகள் கட்சியை தடை செய்வதற்காகவே தமிழக அரசு அடக்கு முறையை ஏவியுள்ளது - நாகை திருவள்ளுவன் குற்றச்சாட்டு

கோவை: தமிழ் புலிகள் கட்சியை தடை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு அடக்கு முறையை ஏவியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


கோவை: தமிழ் புலிகள் கட்சியை தடை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு அடக்கு முறையை ஏவியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் காவல் துறை சிறைப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், 17 பேர் உயிரிழந்த போது மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக,நாகை திருவள்ளுவன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாகை திருவள்ளுவனை நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்ப கோரிய மனுவினை, கோவை 7வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்டராஜா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் பலத்த பாதுகாப்புடன் நாகை திருவள்ளுவனை காவல் துறையினர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.

இதையடுத்து கோவை நீதிமன்ற வளாகத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நிவாரணம் மற்றும் வீடு தரவில்லை எனவும் அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும், தமிழ் புலிகள் கட்சியை தடை செய்ய வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு காவல் துறையோடு இணைந்து அடக்குமுறையை ஏவியுள்ளது எனவும் குண்டர் தடுப்பு சட்டத்தில் தன்னை சிறையில் அடைக்க, பல்வேறு பொய் வழக்குகளை காவல் துறையினர் போடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...