கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே கடந்த சில நாட்களாகவே மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த நிலையில், தற்போது கோவைபுதூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் சந்தன மர வேட்டை சம்பவம் நடத்த துவங்கியது பொதுமக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த சந்தன மர கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள், தற்போது சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குனியமுத்தூர் காவல் எல்லை பகுதியான கோவைபுதூர் பகுதியில் சந்தன மர கடத்தல்காரர்கள் தங்களின் வேட்டையைத் துவங்கியுள்ளனர். நேற்று இரவு கோவைப்புதூர் பகுதியில் "எக்ஸ் பிளாக்கில்" சுரேஷ் என்பருக்கு சொந்தமான வீட்டில் இருந்த சுமார் 20 ஆண்டுகள் பழமையான சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, அடுத்ததடுத்து 3 வீடுகளில் உள்ள சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதியில் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் தான் குனியமுத்தூர் காவல் நிலையப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தி உள்ளனரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.