திருப்பூர்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று துவங்கிய நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் திருப்பூரில் வேட்பு மனு வாங்கவும், அளிக்கவும் வராத நிலையே உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வருகிற 27-ந் தேதியும், அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 30-ந் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.
17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க 4,91,651 ஆண் வாக்காளர்களும், 5,04,050 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 64 பேர் என மொத்தம் 9,95,765 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கால் இன்று வேட்பு மனு வாங்கவும், அளிக்கவும் அதிகளவில் யாரும் வராத நிலையே உள்ளது.