உள்ளாட்சி தேர்தலில்‌ அதிமுக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும்‌ - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், வார்டு மறுவரையறை பணிகள் மே மாதமே முடிந்து விட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது என்றும் 2016ம்‌ ஆண்டு உள்ளாட்சி தேர்தல்‌ அறிவிக்கப்பட்டவுடனே திராவிட முன்னேற்றக் கழகம்‌ நீதிமன்றத்திற்குச் சென்றதனால்‌ தான்‌ உள்ளாட்சி தேர்தல்‌ தடைபட்டது எனவும் அதேபோல, ஒவ்வொரு முறையும் உள்ளாட்சி தேர்தல்‌ அறிவிக்கும் போது, நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட ஸ்டாலின்‌ முயல்வதாக குற்றம்சாட்டினார்.

27 மாவட்டங்களில்‌ தேர்தலை நடத்திக்‌ கொள்ளலாம்‌ என்று தேர்தல்‌ ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும்‌ முறையாக வார்டு வரையறை செய்து அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலை நான்கு மாதத்திற்குள்‌ நடத்த வேண்டும்‌ என்றும்‌ தீர்ப்பை வழங்கியுள்ளது. இவற்றையெல்லாம்‌ ஸ்டாலின்‌ அவர்கள்‌ வரவேற்று விட்டு மீண்டும்‌ நீதிமன்றம்‌ செல்வது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்த அவர், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம்‌ அஞ்சுவதாகவும் பொதுமக்களை சந்திக்க ஸ்டாலின் அஞ்சுவதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில்‌ மட்டுமல்லாமல்‌ ஒட்டுமொத்த இந்தியாவிலும்‌ வெங்காய விலை அதிகமாக உள்ளது எனவும் கனமழை பொழிந்த காரணத்தினால் வெங்காய விளைச்சல்‌ பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த காரணத்தினால்‌ வெங்காய விலை உயர்ந்திருப்பதாகக் கூறிய அவர், தற்பொழுது வெங்காய விளைச்சல் நன்றாக வந்து கொண்டிருப்பதால் இன்னும் 20 நாட்களில் வெங்காய விலை குறையும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...