கோவை: வால்பாறையில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வால்பாறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர்.

இந்த முகாமில் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டுப்பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

மேலும், அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப் பட்ட 17 பேர் இலவசமாக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ரஜினி மக்கள் மன்ற செயலாளர் Mks.நடராஜ், பொருளாளர் லட்சுமி மெஸ் சேகர், இளைஞர் அணி ஜீவானந்தம், கிருஷ்ணகுமார், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.