கோவை: கோவை அரசு மருத்துவமனையின் முன்னாள் இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர்வேலுக்கு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வந்த டாக்டர் சௌந்தர்வேல் கடந்த நவம்பர் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரில் 1990-ம் ஆண்டு பொது மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்று 1991-ம் ஆண்டு அரசு மருத்துவப் பணியில் சேர்ந்தவர், ஒத்தக்கால்மண்டபத்தை அடுத்த, அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார்.
அங்கு ‘சின்ன டாக்டர்’ என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு மக்களுடன் நெருங்கிப் பழகினார். பின்னர், 2002-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை உதவி இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றி அவர், 2015-ம் ஆண்டு இருப்பிட மருத்துவ அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.
மேலும், அவர் தனது பணி காலத்தில் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்துள்ளார். அதேபோல பலதரப்பட்ட இயக்கங்கள், கட்சிகள், பத்திரிகையாளர்கள் , சமூக ஆர்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு தேவையான பல்வேறு மருத்துவம் சார்ந்த உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் புரிந்து பொதுமக்களுக்காக பணியாற்றிய மருத்துவர் சௌந்தர்வேலுக்கு பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தும் வகையில் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரை வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கினர்.

இந்த நிகழ்வில் மூத்த பத்திரிக்கையாளர்கள், இளம் பத்திரிகையாளர் என பலர் கலந்து கொண்டனர்.