நீலகிரியில் தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் தேயிலை அபிவிருத்தி முகாம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென் இந்திய தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய தேயிலை அபிவிருத்தி முகாம் உப்பாசி (UPASI) உள் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தென் இந்திய தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய தேயிலை அபிவிருத்தி முகாம் உப்பாசி (UPASI) உள் அரங்கில் நடைபெற்றது.

இந்திய தேயிலை வாரியம் தேயிலை மேம்பாட்டிற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, தேயிலை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள், மருத்துவ குணம் மற்றும் தனிநபர் அருந்தும் தேநீரின் அளவை அதிகரிக்கும் பொருட்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து இன்று உபாசி அரங்கில் சிறப்பு தேயிலை அபிவிருத்தி முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமில் தேயிலை வாரிய செயல் இயக்குநர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஜப்பானில் அதிகளவு தேநீர் அருந்துவதால் 60 வயது முதியவர் கூட 20 வயது இளைஞர் போல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்கின்றனர் என்றும் தேநீர் அருந்துவதால் உடம்பில் உள்ள கொழுப்பை குறைப்பதுடன் உயிர் அணுக்கள் பாதுகாக்கப்படுகிறது. எனவே சிறியவர் முதல் பெரியவர் வரை தேயிலையின் பயன்பாட்டினை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.



இதனை தொடர்ந்து, தேயிலை விழிப்புணர்வு குறித்த பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 



பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சியில் தேயிலை வாரிய அதிகாரி செல்வராஜ், குன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரி வசந்தம்மாள் மற்றும் தேயிலை வாரிய இயக்குநர் பகலவன் உட்பட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...