2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோசடி செய்ய முயன்ற சம்பவத்தில் நிகழ்ந்த கொலை; வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது

கோவை: கோவை அடுத்த ஈச்சனாரி அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் 3 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: கோவை அடுத்த ஈச்சனாரி அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளிகள் 3 பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுவதாகவும், அதற்கு பதில் 1000 ரூபாய் நோட்டை வெளியிடுவதாகவும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை போல சமூக வலைத்தளத்தில் பொய்யான பரப்புரைகள் பரப்பப்பட்டு வருகிறது.



இந்தநிலையில் கடந்த மூன்றாம் தேதி ஈச்சனாரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2000 ரூபாய் நோட்டு மோசடி விவகாரம் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் கடந்த 3ம் தேதி ஈச்சனாரி பகுதியில் முட்புதரில் பிணமாக கிடந்தார். இதைத்தொடர்ந்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சண்முகத்தை கொலை செய்ததாக மதுசூதனன், சதீஸ், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ் மதுக்கரை ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் எனவும் மகேஸ்வரன் விற்பனை மேலாளர் எனவும் மதுசூதனன் இவர்களின் நண்பர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், விரைவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது எனவும் 2000 ரூபாய் நோட்டு வாங்கி கொடுத்தால் அதற்கு ஈடாக 500 ரூபாய் நோட்டு தருவதாக ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ், ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்திடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, மேலாளர் சதீஷிடம் 4.25 லட்சம் பணத்திற்கு 500 ரூபாய் நோட்டுகளை வாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், அதற்கு ஈடாக 5 லட்சத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகளை கேரளாவில் உள்ள தனது நண்பர் நவுசாத்திடம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பணத்தை வாங்கி கொண்ட ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம், அதற்கு ஈடாக 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக சண்முகத்திடம் கேட்ட போது, கேரளாவில் உள்ள நண்பர் நவ்சாத் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறவே, சண்முகத்தை ஈச்சனாரி பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இதில் சண்முகம் உயிரிழக்கவே அவரது உடலை ஈச்சனாரி பகுதியில் போட்டுவிட்டு 3 பேரும் தப்பியுள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் சதீஷ் உட்பட 3 பேரை பிடித்த காவல்துறையினர், கேரளாவில் உள்ள நவ்சாத் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...