கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்பு மிகவும் பழுதடைந்த நிலையில், அதே இடத்தில் புதிய வீடு வழங்க அரசு பொறுப்பேற்க வேண்டும் என சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த நிலையில், பழுதடைந்த ஹவுசிங் யூனிட் குடியிருப்பை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிங்காநல்லூரில் உள்ள இந்த ஹவுசிங் யூனிட் குடியிருப்புகள் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து கிடக்கின்றது. இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர, சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்ததாகவும், இதுவரை எந்த பதிலும் அரசு தரப்பிலிருந்து தர மறுப்பதாக கூறினார்.

மேலும், இந்த குடியிருப்பில் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் இந்த குடியிருப்புகளுக்கு அனைவரும் சொந்தமாக பணம் செலுத்தியுள்ளதாக கூறிய அவர், அதே இடத்தில் இவர்களுக்கு புதிய குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும் எனவும் இதற்கு முழு பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.