குன்னூர் வெலிங்டனில் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட 502 இளம் ராணுவ வீரர்கள்

நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இன்று 502 இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி: குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இன்று 502 இளம் ராணுவ வீரர்களுக்கு சத்திய பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 502 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்திய பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது.



பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர். ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. பயிற்சி வீரர்களின் கம்பீரமான அனுப்பி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரிகேடியர் ஆர்.எஸ்.குரையா அவர்களால் 4 சிறந்த வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



பின்னர் விழாவில் அவர் பேசுகையில், இந்த இளம் இராணுவ வீரர்கள் கடினமான பயிற்சி மேற்கொண்டு இந்திய இராணுவத்திற்கு அர்ப்பணிப்பதாகவும், அவர்களது எதிர்காலம் நல்ல முறையில் அமைய வாழ்த்து தெரிவித்தார். தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாய் அணிவகுத்து வந்த காட்சியை கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த 502 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், பயிற்சி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...