சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம்; புகாரை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளை கைது செய்ய குழு - ஈஸ்வரன் வலியுறுத்தல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொதுமக்கள் புகாரினை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பொதுமக்கள் புகாரினை அலட்சியப்படுத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்ய தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூரில் சுற்றுசுவர் இடிந்து குடியிருப்புகள் மீது விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இடத்தை இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நேரில் பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சுற்றுவர் அச்சுறுத்தலாக உள்ளதாக பலமுறை இப்பகுதி மக்கள் புகார் கூறியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகளை கண்டறிந்து, அவர்களை தண்டிக்க அரசு தனி குழு அமைத்து வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

மேலும், வீட்டின் உரிமையாளர் எவ்வாறு கைது செய்யப்பட்டது போல, அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...