திருப்பூர்: பாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று திருப்பூரில் இருவேறு இடங்களில் எஸ்டிபிஐ மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் விதமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் மோடி மற்றும் அமித்ஷாவின் நம்பிக்கையை பெற இதுபோன்ற தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர், பாபர் மசூதி தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரையும் போலீசார் கைது செய்தனர்.