கோவை: பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருஞ்சட்டை அணிந்து உரிமை மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தமுமுக தலைவர் அஹமது கபீர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கிட வேண்டும், பாபர் மசூதி இடித்தவர்களை தண்டிக்க வேண்டும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேசிய அவர்கள், இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 9ம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு முறைகேடான தீர்ப்பாக இருப்பதாகவும் இடித்தவர்களுக்கே இடம் என்ற முரண்பாடான தீர்ப்பை வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதிப்பதாகவும் ஆனால், முரண்பாடான இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், பாபர் மசூதி கட்டப்படும் வரை போராட்டம் ஓயாது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.