ஒத்தக்கால்‌ மண்டபம்‌ பேரூராட்சியில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்‌ ஆய்வு

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கால்மண்டபம்‌ பேரூராட்சி, மதுக்கரை பேரூராட்சி, மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில்‌ இன்று (06.12.2019) மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்நிகழ்வில்‌ உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) துவாரகநாத்சிங்‌, பேரூராட்சிகள்‌ உதவிபொறியாளர்‌ இராமசாமி, செயல்‌ அலுவலர்‌ சசிகலா, ஆர்‌.பார்த்திபன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கால்மண்டபம்‌ பேரூராட்சி, மதுக்கரை பேரூராட்சி, மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில்‌ இன்று (06.12.2019) மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. இந்நிகழ்வில்‌ உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) துவாரகநாத்சிங்‌, பேரூராட்சிகள்‌ உதவிபொறியாளர்‌ இராமசாமி, செயல்‌ அலுவலர்‌ சசிகலா, ஆர்‌.பார்த்திபன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்ட ஆட்சியர்‌ அவர்களால்‌ பல்வேறு துறைகளின்‌ சார்பில்‌ செயல்படுத்தப்படும்‌ அடிப்படை வளர்ச்சித்திட்டப்பணிகளின்‌ செயல்பாடுகள்‌ குறித்து அவ்வப்போது கள ஆய்வுகள்‌ நடத்தப்பட்டு வருகின்றது. 



அதன்படி, இன்று பேரூராட்சிகளின்‌ துறையில்‌, ஒத்தக்கால்மண்டபம்‌ பேரூராட்சி வார்டு எண்‌.15, வேலந்தாவளம்‌ சாலை ஸ்ரீராம்‌ பகுதியில்‌ ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு வளர்ச்சித்திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ வடிகாலுடன்‌, தார்சாலை அமைக்கும்‌ பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ சாலையில்‌ இருப்புறங்களிலும்‌ ஆழத்துளையிட்டு முறையான அரசு விதிகளின்படியும்‌, வெட்மிக்ஸ்‌ மெட்டல்‌, போன்றவை சரியான விகிதாச்சார அளவீட்டின்‌ படி அமையப்பெற்றிருப்பதனையும்‌ பரிசோதித்து பார்த்தார்‌.

தொடர்ந்து, மதுக்கரை பேரூராட்சியில்‌ வார்டு எண்‌:11 பாரதி வீதியில்‌ ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்‌ அவர்கள்‌ பாதியில்‌ நிறுத்தப்பட்டிருந்த வடிகால்‌ அமைக்கும்‌ பணியினை நான்கு தினங்களுக்குள்‌ முழுமையாக முடித்திட உத்தரவிட்டார்‌. இவ்வடிகால்‌ அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களின்‌ கருத்துக்களையும்‌ கேட்டறிந்ததுடன்‌, மேற்காண்‌ பேரூராட்சிகளில்‌ தடையில்லா குடிநீர்‌, சாலை மற்றும்‌ தெருவிளக்கு வசதிகள்‌ போன்றவை குறித்தும்‌ அலுவலர்களிடம்‌ ஆய்வு செய்தார்‌. மேலும்‌, மதுக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில்‌ ஆய்வு மேற்கொண்டு அங்கு தேவைப்படும்‌ அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌, மாணவர்களின்‌ சேர்க்கை, ஆசிரியர்களின்‌ எண்ணிக்கை தொடர்பாகவும்‌ அரசுப்பள்ளி முதல்வரிடம்‌ ஆய்வு மேற்கொண்டார்‌. மேலும்‌, பள்ளிகளின்‌ தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதாகவும்‌ தெரிவித்தார்‌.

பின்னர்‌, மதுக்கரை அரசு மருத்துவமனையில்‌ நேரில்‌ திடீர்‌ ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்‌, சுத்தமான குடிநீர்‌ வழங்குவதை அருந்தி பார்த்து பரிசோதித்துடன்‌, மருத்துவமனைக்கு வருகை தரும்‌ நோயாளியிடம்‌ மருத்துவமனையின்‌ தரம்‌ குறித்து கேட்டறிந்தார்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...