நீலகிரி அருகே சாலை 500 மீட்டருக்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி:நீலகிரியில் கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்குச் செல்லும் சாலை 500 மீட்டர் அளவில் பூமிக்குள் உள்வாங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர், புவியியல் துறை ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி:நீலகிரியில் கீழ் கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் பழங்குடியினர் கிராமத்திற்குச் செல்லும் சாலை 500 மீட்டர் அளவில் பூமிக்குள் உள்வாங்கிய நிலையில் மாவட்ட ஆட்சியர், புவியியல் துறை ஆய்வு மேற்கொண்டனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் கீழ் கோத்தகிரியில் இருந்து சோலூர் மட்டம் வழியாக கரிக்கையூர், பங்களா பாடி போன்ற பழங்குடியினர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மெட்டுக்கல் என்று பகுதியில் உள்ள சாலை தேயிலைத் தோட்டம் என சுமார் 500 மீட்டர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.



மேலும், உள்வாங்கிய பகுதியில் இருந்த பாறை சரிந்து, மரங்களும் விழுந்ததால் நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அப்போது, உள்வாங்கிய பகுதி மெல்ல மெல்ல பூமிக்குள் புதைவதால், மண் வள ஆராய்ச்சி நிலையத்திலிருந்து பேராசிரியர் மணிவண்ணன் தலைமையில் இன்று முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பூமி உள்வாங்கிய பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 கிராமங்களுக்குச் செல்லும் பழங்குடியினர் பல கிலோ மீட்டர் தூரம் யானை காட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...