உடல் நலக் குறைவால் காவல்துறை மோப்ப நாய் ராம்போ உயிரிழப்பு

கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துப்பறியும் மோப்ப நாய் ராம்போ உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.


கோவை: கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துப்பறியும் மோப்ப நாய் ராம்போ உடல் நலக் குறைவால் உயிரிழந்தது.

கோவை மாநகர காவல் துறையில் போலீஸ் துப்பறியும் நாய் படை மற்றும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாநிலம் முழுவதும் காவல் துறையில் உள்ள துப்பறியும் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ராம்போ என்ற டாபர்மேன் இனத்தைச் சேர்ந்த நாய் பயிற்சியில் இணைக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக மாநகர காவல் துறையில் பணியாற்றி வந்த ராம்போவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த மோப்ப நாய் ராம்போ வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் பணியாற்றி பல்வேறு வழக்குகளில் போலீஸாருக்கு உதவியாக இருந்துள்ளது. மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு காவல் துறை சார்பில் திருச்சூரில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய் கண்காட்சி போட்டியில் மூன்றாம் இடமும், கோவையில் நடைபெற்ற சிறந்த நாய்க்கான போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றது.

இதையடுத்து, ஓய்வு அளிக்கப்பட்ட பிறகும் மாநகர் காவல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 23ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராம்போ, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.a

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...