திருப்பூர்: திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54வது வார்டு வீரபாண்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில், இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலைகள் பல்வேறு பகுதிகளில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.

மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி சாலைகளில் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.