கோவை: கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போக்குவரத்து காவலர் தனது மனைவியை கோவை அரசு மருத்துவமனையில் பிளேடால் அறுக்க முற்பட்ட போது பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடை வீதி காவல்நிலையத்தில் முதல்நிலை போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் அய்யலு கணேசன் (38). இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனர். அய்யலு கணேசனுக்கும் மனைவி ஸ்ரீஜாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 மாதங்களாக ஸ்ரீஜா சுண்டக்காமுத்தூரில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
கணவர் அய்யலு கணேசன் அடிக்கடி தனது தாயார் வீட்டிற்கு வந்து சித்திரவதை படுத்துவதாக ஸ்ரீஜா பலமுறை காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார்.இந்த நிலையில், நேற்று மீண்டும் ஸ்ரீஜாவை சந்திக்க வந்த கணவர் அவரை தாக்கியதுடன் தடுக்க வந்த ஸ்ரீஜாவின் தாய் மற்றும் தனது மகளையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீஜாவின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதால் கோவை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த அய்யலு கணேசன், மருத்துவமனையின் வளாகத்தில் வைத்து ஸ்ரீஜாவை பிளேடால் கழுத்தில் அறுக்க முற்பட்டுள்ளார். இதை தொடர்ந்து பொது மக்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.