நீலகிரியில் கன்டோன்மெண்ட் தேர்தல் குறித்து உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் - தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பி பலிச்சா

நீலகிரி: கன்டோன்மெண்ட் தேர்தல் குறித்து டெல்லி உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பி பலிச்சா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

நீலகிரி: கன்டோன்மெண்ட் தேர்தல் குறித்து டெல்லி உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பி பலிச்சா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

குன்னூர் அருகே வெலிங்டனில் கன்டோன்மெண்ட் போர்டு நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா வெலிங்டன் என்ற இலக்கை அடையும் நோக்கில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்டோன்மெண்ட் பகுதிகளில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 7 வார்டுகளிலும் தூய்மை பராமரிப்பு பணி கடந்த 1ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பணி எதிர்வரும் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் (7ம் தேதி) அனைத்து வார்டுகளிலும் நடை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் போர்டு துணைத் தலைவர், போர்டு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். அது சமயம் சாலையோரம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதின் பொருட்கள் சேகரிக்கப்படும், இந்த கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேர்க்கப்படும் என்றார்.

மேலும், தற்போதுள்ள போர்டு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் எதிர்வரும் 2020 பிப்ரவரி மாதம் 10ம் தேதியுடன் முடிய உள்ளது. புதுடெல்லியிலுள்ள இயக்குநர் ஜெனரல் அறிவுரை படி, கன்டோன்மெண்ட் போர்டிற்கு பொது தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 7 வார்டுகளில் 2வது வார்டு ரிசர்வ் தொகுதியாக உள்ளது. கடந்த முறை 6, 7 ஆகிய வார்டுகள் பெண்கள் வார்டுகளாக இருந்தன. இந்த தேர்தலில் இதனை விடுத்து 1,3,4,5 ஆகிய வார்டுகளில் 2பெண்கள் வார்டு என அறிவிக்க குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். இந்த குலுக்கல் தேர்வு எதிர்வரும் 12ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது என்றார்.

கன்டோன்மெண்ட் பொதுத் தேர்தல் நடைபெறாது என்றும் ஒரு ஆண்டிற்கு தேர்தல் தள்ளி வைக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறார்கள். இதனை பொது மக்கள் நம்ப வேண்டாம் எனவும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படும் என கூறினார். மேலும், தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடிந்தவுடன் இயக்குநர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்பி, அதன் அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த அறிக்கையின் அடிப்படையில் இயக்குநர் ஜெனரல் அலுவலகத்திலிருந்து தேர்தல் தேதி வெளியிடப்படும். என்று கன்டோன்மெண்ட தலைமை நிர்வாக அதிகாரி பூஜா பி.பலிச்சா தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...