குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் கைது

கோவை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியினர் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில், அம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அம்மசோதாவினை திரும்ப பெறக்கோரி கோவை ரயில் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். சிறுபான்மையின மக்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை பாஜக செயல்படுத்தி வருவதாகவும் மாநில சுயாட்சிக்கு எதிரான திட்டமாக இந்த மசோதா இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லையெனில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...