நச்சுக்காற்றை சுவாசிப்பதிலிருந்து விடுதலை..! வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் விரைவில் 'பயோ மைனிங்' முறை

கோவை: பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில் மற்றும் கற்கள் அதிகளவு காணப்படும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை, 'பயோ மைனிங்' முறையில் குப்பைகளை பிரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கோவை: பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில் மற்றும் கற்கள் அதிகளவு காணப்படும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள குப்பைகளை, 'பயோ மைனிங்' முறையில் குப்பைகளை பிரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளலூர் குப்பைக்கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 850 டன் முதல் 1000 டன் வரை இங்கு குப்பை குவிக்கப்படுகிறது. அதிகமான குப்பைகள், லாரிகள் மூலமாக கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றி சுமார் 4 கி.மீ. சுற்றளவில், கோணவாய்க்கால்பாளையம், அன்புநகர், எல்.ஜி. நகர், ஸ்ரீராம் நகர், கஞ்சிகோணாம்பாளையம், சாமனாபுரம், சித்தன்னாபுரம், அற்புதம் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. தவிர, வெள்ளலூர் பேரூராட்சி மற்றும் மலுமிச்சம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்களும் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த குப்பை கிடங்கில் குவிக்கப்படும் குப்பைகள் காரணமாக, சுற்று வட்டார பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிச்கொண்டே இருக்கும் நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் நிதி செயலாளர் 60.16 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ பேசுகையில், வெள்ளலூரில் கழிவுகளை அகற்றுவதற்காக பயோ மைனிங் முறையில் அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து அகற்றி, அந்த இடத்தில் குப்பை இல்லாத நிலமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

இதேபோல, குறிச்சி குளத்தை மாநகராட்சி 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், குறிச்சி குளத்தில் உள்ள செடிகளை அகற்றி புனரமைப்பு மற்றும்‌ சீரமைப்பு பணி மேற்கொள்வதற்காக இந்த கூட்டத்தில் 52.15 கோடி செலவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், உக்கடம் பெரிய குளத்தில் வரவிருக்கும் அனைத்து வசதிகளும் குறிச்சி குளத்திலும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...