கோவையில் முதல் முறையாக வாட்டர் ஏடிஎம் திறப்பு ..! ஒரு ரூபாய்க்கு 1 லிட்டர் தண்ணீர் விற்பனை

கோவை: பாட்டில்கள் கேன்களில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோவையில் முதல் முறையாக உக்கடம் பேருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சி, மகளிர் சுய உதவி குழுவுடனும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாட்டர் ஏடிஎம் மையம் துவங்கியுள்ளது.


கோவை: பாட்டில்கள் கேன்களில் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோவையில் முதல் முறையாக உக்கடம் பேருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சி, மகளிர் சுய உதவி குழுவுடனும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாட்டர் ஏடிஎம் மையம் துவங்கியுள்ளது.

பொது குழாய் மூலம் பிடிக்கப்படும் தண்ணீர் ஆர்.ஒ முறையில் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு அதே அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியும்.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தாரணா நிறுவனத்துடன் கோவை மாநகராட்சி மகளிர் சுய உதவி குழு மூலம் பராமரிக்கப்பட்டு இந்த தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஒரு ரூபாய் நாணயத்தை செலுத்தி 1 லிட்டர் தண்ணீர் பிடித்து கொள்ளலாம். தொழிற்சாலைகள், வணிக வளாகங்களுக்குக் குடிநீர் தேவைப்படுவோர் ஐ “இனிசேடிவ்” என்ற ஸ்மார் கார்டு வழங்கப்பட்டு அதனை ப்ரிபெய்டு ரீசார்ஜ் செய்து தேவைக்கேற்ப கேன்களில் தண்ணீர் பெற்று கொள்ளலாம்.



ஸ்மார்ட் கார்டு மூலம் தண்ணீர் பெறும் போது தொகை ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகையில் இருத்து கழிக்கப்படும் எனவும் கூகுள் பே, பே.டி.எம் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 



ஒரு கேனில் நீர் நிரப்பி கொள்ள 20 லிட்டர் தண்ணீருக்கு 7 ரூபாயும், அதிகபட்சமாக இரண்டு கேன் தண்ணீர் பிடித்து கொள்ளலாம். திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சி விசேஷங்களுக்கு தண்ணீர் வேண்டுவோர், இங்கு வந்து தண்ணீர் பிடிக்கும் பட்சத்தில் கேன் ஒன்றுக்கு 20 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், பெரிய கேன்களில் விற்கப்படும் குடிநீருக்கு மகளிர் சுய உதவி குழுவிற்கு 12 ரூபாயும் தாரணா நிறுவனத்திற்கு ஆறு ரூபாயும் மாநகராட்சிக்கு இரண்டு ரூபாய் என தற்போது நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏடிஎம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யும் முறை ஈரோடு, சேலம், நீலகிரி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருவதாகவும் கோவையில் இது முதல் முறை என தெரிவித்தனர். மேலும், 24 மணி நேரமும் இந்த குடிநீர் விநியோகம் இருக்கும் எனவும் மக்கள் தேவைக்கேற்ப 130 இடங்களில் இந்த வாட்டர் ஏடிஎம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...