கோவை: மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மின்சாரம் தடையான அருகில் இருந்த வீடுகளுக்கு மீண்டும் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் கடந்த திங்கட்கிழமை மூன்று வீடுகள் மீது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
இதில் இடிந்த வீடுகளுக்கு ஒட்டியவாறு 3 வீடுகள் இருக்கின்றன. சம்பவத்தன்று இந்த வீடுகளில் உள்ள மின் கம்பிகள் சேதமாகி மின்சார இணைப்பு தடைப்பட்டது. இதனிடையே இன்று இந்த வீடுகளுக்கு மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டு மின் வாரிய ஊழியர்களால் மீண்டும் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டன.